இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 07-10-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.;
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளின் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை ரெயில்வே அறிமுகம் செய்ய உள்ளது. வரும் ஜனவரி முதல் ஆன்லைனில் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி மாற்ற முடியும். எனினும், மாற்றப்படும் தேதிக்கான டிக்கெட் உறுதியாவது, காலியிடங்களைப் பொறுத்ததே என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் காரணமாக 2020ம் ஆண்டு கமலக்கண்ணன் என்ற இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கைதான 10 பேரில் ஒருவர் உயிரிழந்த நிலையில், 9 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலைக்கு சுமார் 30 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பு, கூட்ட நெரிசல் ஒழுங்குபடுத்துதல் தொடர்பாக வேலூர் சரக டி.ஐ.ஜி தர்மராஜன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட எஸ்.பி. சுதாகர், ஏ.எஸ்.பி. சதீஷ் உள்ளிட்டோர் ஆய்வில் உடன் இருந்தனர்
இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் - பாக்.,பயங்கரவாதி எச்சரிக்கை
இந்திய பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என பாகிஸ்தான் பயங்கரவாதி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய லஷ்கர்-இ-தொய்பா துணைத்தலைவர் சைபுல்லா, ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. மே 10 ஆம் தேதி நாம் செய்து காட்டியதைப் போல் பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு பாடம் கற்பிக்க பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு அசீம் முனீருக்கு கோரிக்கை விடுப்பதாகவும் கூறினார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் முடிவெடுக்கும் வரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையை தள்ளி வைக்க செந்தில் பாலாஜி உதவியாளர் கோரிக்கை வைத்தார். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செந்தில் பாலாஜி உள்ளிட்ட 10 பேர் நேரில் ஆஜரான நிலையில் அவரது சகோதரர் அசோக் ஆஜராகவில்லை.
தமிழகத்தில் நோயாளிகள் இனி மருத்துவ பயனாளிகள் என அழைக்கப்படுவர் - அரசாணை வெளியீடு
மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை இனி மருத்துவ பயனாளர்கள் என அழைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் தற்போது தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளார்.
கரூர் சம்பவத்தை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
கேரள சட்டசபையில் 2-வது நாளாக எதிர்க்கட்சிகள் போராட்டம்
இன்று 2-வது நாளாக சட்டசபை கூடியது. தொடர்ந்து இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பின. அவர்கள் ,அவையின் நடுவில் பதாகைகளுடன் நின்று ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். தேவசம்போர்டு மந்திரி பதவி விலக வேண்டும். தேவசம்போர்டு பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பராமரிப்பு பணி காரணமாக காட்பாடி - ஜோலார்பேட்டை இடையே புறநகர் ரெயில் சேவைகள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.