மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 11-12-2025
மார்கழி மாதம்: மீனாட்சி அம்மன் கோவிலில் 16-ந் தேதி முதல் நடைதிறப்பில் மாற்றம்
உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் நடைதிறப்பில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி பூஜைகள் வருகிற 16-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம்(ஜனவரி) 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நாட்களில் அதிகாலையில் பக்தர்களுக்கு திருஞானசம்பந்தர் சன்னதி முன்பாக வழக்கம் போல் திருஞானபால் வழங்கப்பட உள்ளது.
Update: 2025-12-11 07:08 GMT