டெல்லி கார் வெடிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025
டெல்லி கார் வெடிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Update: 2025-11-12 05:29 GMT