டெல்லி கார் வெடிப்பு: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு

பக்தர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.
திருவண்ணாமலை,
டெல்லியில் நேற்று முன்தினம் மாலை நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக தமிழகத்தில் நேற்று முன்தினம் இரவு பெரும்பாலான பகுதிகளில் போலீசார் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனை, தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களிகள் உடைமைகளை போலீசார் சோதனை செய்து வருகின்றனர். ராஜகோபுரம் மற்றும் அம்மணியம்மன் கோபுரம் நுழைவாயில் வழியாக பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அங்கு கோபுர நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பக்தர்கள் கொண்டு வந்த பைகளை திறந்து பார்த்து மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தனர்.






