சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 12-11-2025

சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு

ரெயில்வே வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி, சென்னை சென்டிரல்- விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 12-ந் தேதி முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது. அதன்பின்னர், மதியம் 12.29 மணிக்கு கூடிவாடாவையும், மதியம் 1.14-க்கு பீமாவரம் டவுனையும், மதியம் 2.10 மணிக்கு நரசபூரையும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், நரசபூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 11.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

Update: 2025-11-12 13:05 GMT

Linked news