சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு

சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது.
சென்னை-விஜயவாடா வந்தே பாரத் ரெயில் நரசபூர் வரை நீட்டிப்பு
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ரெயில்வே வாரியம் அளித்துள்ள அனுமதியின்படி, சென்னை சென்டிரல்- விஜயவாடா இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில் ஜனவரி 12-ந் தேதி முதல் நரசபூர் வரை நீட்டிக்கப்படுகிறது.

சென்னை சென்டிரலில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரெயில் பகல் 11.45 மணிக்கு விஜயவாடாவை சென்றடைகிறது. அதன்பின்னர், மதியம் 12.29 மணிக்கு கூடிவாடாவையும், மதியம் 1.14-க்கு பீமாவரம் டவுனையும், மதியம் 2.10 மணிக்கு நரசபூரையும் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், நரசபூரில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இரவு 11.45 மணிக்கு சென்னை சென்டிரலை வந்தடைகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com