சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-11-2025
சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் - ராமதாஸ் இரங்கல்
சவுதியில் நடந்த சாலை விபத்தில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வருவதுடன், அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
Update: 2025-11-17 05:58 GMT