சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் - ராமதாஸ் இரங்கல்


சவுதி அரேபியாவில் உயிரிழந்த 42 இந்தியர்கள் - ராமதாஸ் இரங்கல்
x

பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

நமது அண்டை மாநிலமான தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலிருந்து சவுதி அரேபியா சென்று, அங்கு மெக்காவில் இருந்து மதினாவுக்கு புனிதப் பயணம் சென்று கொண்டிருந்த போது சவுதியில் நடந்த சாலை விபத்தில் பேருந்தும், டீசல் லாரியும் மோதி தீப்பிடித்ததில் 42 இஸ்லாமியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய அரசு உடனடியாக இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள், உடன் சென்ற அனைவரையும் மீட்டு இந்தியாவுக்கு பத்திரமாக கொண்டு வருவதுடன், அவர்களுக்கான நிவாரண உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story