லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 19-11-2025

லெபனானில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்; 13 பேர் பலி

லெபனானின் தெற்கே சிடோன் என்ற கடலோர நகரில், பாலஸ்தீனிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்தனர். அவர்களையும், உடல்களையும் மீட்க ஆம்புலன்சுகள் சென்றுள்ளன.

இதுபற்றி இஸ்ரேல் கூறும்போது, இஸ்ரேல் மற்றும் ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்துவதற்காக, ஹமாஸ் அமைப்பு சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வந்த பகுதி மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது என தெரிவித்தது.

Update: 2025-11-19 06:44 GMT

Linked news