இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 2-9-2025
இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் நாளை நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா தலைமையிலான அந்த அணியில் சீன் வில்லியம்ஸ். பிரண்டன் டெய்லர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Update: 2025-09-02 11:38 GMT