இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு


இலங்கைக்கு எதிரான டி20 தொடர்: ஜிம்பாப்வே அணி அறிவிப்பு
x

image courtesy:ICC

இலங்கை - ஜிம்பாப்வே முதல் டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.

ஹராரே,

இலங்கை கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை முழுமையாக கைப்பற்றியது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறுகிறது. அதன்படி முதல் டி20 போட்டி ஹராரேயில் நாளை நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ஜிம்பாப்வே அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் ராசா தலைமையிலான அந்த அணியில் சீன் வில்லியம்ஸ், பிரண்டன் டெய்லர் போன்ற முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஜிம்பாப்வே அணி விவரம்:

சிக்கந்தர் ராசா (கேப்டன்), பிரையன் பென்னட், ரியான் பர்ல், பிராட் எவன்ஸ், ட்ரெவர் குவாண்டு, கிளைவ் மடாண்டே, டினோடெண்டா மபோசா, தடிவானாஷே மருமணி, வெலிங்டன் மசகட்சா, டோனி முனியோங்கா, தஷிங்கா முசெகிவா, பிளெஸ்சிங் முசரபானி, டியான் மியர்ஸ், ரிச்சர்ட் ங்கராவா, பிரெண்டன் டெய்லர், சீன் வில்லியம்ஸ்

1 More update

Next Story