சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-12-2025

சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..? 


இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, புதிய உச்சத்தில் ஒரு கிராம் ரூ.226-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

Update: 2025-12-20 05:03 GMT

Linked news