சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..?


சற்று உயர்ந்த தங்கம் விலை... புதிய உச்சத்தில் வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன..?
x

கோப்புப்படம் 

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.

சென்னை

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் இருந்து தாறுமாறாக ஏற்றம் கண்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380-க்கும், ஒரு சவரன் ரூ.99,040-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் கட்டுக்கடங்காமல் உயர்ந்து தினமும் புதிய வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் உயர்ந்து, புதிய உச்சத்தில் ஒரு கிராம் ரூ.226-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

1 More update

Next Story