லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 22-09-2025
லெபனானில் நள்ளிரவில் இஸ்ரேல் டிரோன் தாக்குதல்; 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி
அமெரிக்கா தலைமையில், கடந்த ஆண்டு நவம்பரில் லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த சூழலில், லெபனான் நாட்டின் தெற்கே பின்ட் பெய்ல் நகர் மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் நள்ளிரவு தொடங்கி கடுமையான தாக்குதலை நடத்தி உள்ளன.
போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ள நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதுபற்றி லெபனானின் என்.என்.ஏ. என்ற அரசு ஊடகம் வெளியிட்ட செய்தியில், டிரோன் தாக்குதலில் மோட்டார் சைக்கிள், வாகனம் ஒன்றும் சேதமடைந்தது. 2 பேர் காயமடைந்தனர் என தெரிவித்து உள்ளது.
இதில், 3 குழந்தைகள் உள்பட 5 பேர் பலி ஆனார்கள். அவர்கள் செலின், ஹதி மற்றும் அசீல் என அடையாளம் காணப்பட்டு உள்ளது. அவர்களும், அவர்களுடைய தந்தையும் அமெரிக்க குடிமக்கள் ஆவர். இந்த தாக்குதலில், அவர்களுடைய தாயார் காயமடைந்து உள்ளார்.