டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்? அண்ணாமலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 23-09-2025
டிடிவி தினகரனை சந்தித்தது ஏன்? அண்ணாமலை விளக்கம்
நேற்று பாதுகாப்பு வாகனங்களை தவிர்த்துவிட்டு, மாற்றுக் காரில் அடையாறில் உள்ள டிடிவி தினகரன் வீட் டுக்கு அண்ணாமலை சென்றார். அங்கு டிடிவி தினகரனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். சந்திப்பின்போது, கூட் டணியில் தொடர்ந்து இருக்குமாறு தினகரனை அண்ணாமலை கேட்டுக் கொண்டதாக தெரிகிறது. அப்போது, பழனி சாமியை தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்பதில் டிடிவி தினகரனும் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்தது.
Update: 2025-09-23 05:22 GMT