கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலிஆந்திர... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 24-05-2025
கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலி
ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி பகுதியில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், கடப்பாவின் கவுலச்சேருவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக கார் மீது மோதியது.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார். பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Update: 2025-05-24 11:14 GMT