கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலி


கார் மீது லாரி மோதி கோர விபத்து - 5 பேர் பலி
x

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமராவதி,

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் ராயசோட்டி பகுதியில் இருந்து கடப்பா மாவட்டத்திற்கு இன்று கார் சென்றுகொண்டிருந்தது. அந்த காரில் 3 பெண்கள், குழந்தை உள்பட 5 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், கடப்பாவின் கவுலச்சேருவு பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி அதிவேகமாக கார் மீது மோதியது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story