பீகார்: ஆற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025

பீகார்: ஆற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற சென்று 5 பேர் பலியான சோகம்


பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் கரி கோசி ஆற்றிற்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் நீரில் இறங்கியபோது, 9 வயது சிறுமி திடீரென கடுமையான நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.

இதனால், சிறுமியின் உறவினர்கள் ஒவ்வொருவராக ஆற்றில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இதுபோன்று 4 பேர் ஆற்றில் குதித்து, சிறுமியை காப்பாற்ற முயன்றனர்.

எனினும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் மொத்தம் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.

Update: 2025-08-24 04:04 GMT

Linked news