பீகார்: ஆற்றில் தவறி விழுந்த சிறுமி; காப்பாற்ற சென்று 5 பேர் பலியான சோகம்

4 பேர் ஆற்றில் குதித்து, சிறுமியை காப்பாற்ற முயன்றனர்.
பூர்னியா,
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஸ்பா பகுதியில் கரி கோசி ஆற்றிற்கு ஒரு குடும்பத்தினர் சென்றனர். அவர்கள் நீரில் இறங்கியபோது, 9 வயது சிறுமி திடீரென கடுமையான நீரோட்டத்தில் சிக்கி கொண்டார்.
இதனால், சிறுமியின் உறவினர்கள் ஒவ்வொருவராக ஆற்றில் இறங்கி சிறுமியை காப்பாற்ற முயன்றனர். இதுபோன்று 4 பேர் ஆற்றில் குதித்து, சிறுமியை காப்பாற்ற முயன்றனர்.
எனினும், அவர்கள் அனைவரும் நீரில் மூழ்கினர். இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தின் மொத்தம் 5 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்து உள்ளனர்.
அவர்கள் சுலோச்சனா தேவி (வயது 30), கவுரி குமாரி (வயது 9), சேகர் குமார் (வயது 21), கரண் குமார் (வயது 21) மற்றும் சச்சின் குமார் (வயது 18) என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. இதனால், அந்த பகுதியில் சோகம் ஏற்பட்டு உள்ளது.
அந்த உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என மாவட்ட மாஜிஸ்திரேட் அன்சுல் குமார் கூறினார். பீகார் மந்திரி லேசி சிங், உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.






