வெட்கமும் இல்லை... கோபமும் இல்லை; எல்லா வேஷமும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 24-08-2025
வெட்கமும் இல்லை... கோபமும் இல்லை; எல்லா வேஷமும் நான் போட்டு இருக்கிறேன்: கமல்ஹாசன்
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தி.மு.க. மாணவர் அணி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில், “மாநிலக் கல்விக் கொள்கையின் முக்கிய சாராம்சம் இரு மொழிக் கொள்கை. ஆனால் தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கூறப்பட்டுள்ளது. ஒன்று தாய்மொழி, ஒன்று ஆங்கிலம் மற்றொரு மொழி கற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மற்றொரு மொழி என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு 6 மொழி தெரியும். எனக்கு வேண்டிய மொழியை தேவைப்படும் நேரத்தில் கற்றுக்கொண்டேன். ஆனால் என்னுடைய தாய் மொழி தமிழ் தான்” என்று கூறினார்.
Update: 2025-08-24 05:18 GMT