‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-09-2025
‘சென்னை ஒன்று செயலி’யில் ஏ.சி. மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது - தெற்கு ரெயில்வே தகவல்
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை ஒன்று செயலியில், புறநகர் மின்சார ரெயிலில் டிக்கெட் எடுத்து பயணிக்கலாம். ஏற்கனவே உள்ள யூ.டி.எஸ்., செயலி இருப்பது போல், இந்த செயலியையும் பயணியர் பயன்படுத்தலாம். புறநகர் ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. 'ஏ.சி.' மின்சார ரெயில் டிக்கெட் எடுக்க முடியாது. டிக்கெட் பரிசோதனையின்போது, பயணியர் 'அசல் ரெயில் டிக்கெட்டைக் காட்டு' பக்கத்தின் வாயிலாக, டிக்கெட்டுகளைக் காண்பிக்க வேண்டும். டிக்கெட்டுகளை ரத்து செய்ய முடியாது. இந்த டிக்கெட்டுகள் எடுத்த அடுத்த 3 மணி நேரத்துக்குள் பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Update: 2025-09-25 03:49 GMT