ஈரப்பதத்தால் வாடும் விவசாயிகள்காவிரி நதியினால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

ஈரப்பதத்தால் வாடும் விவசாயிகள்

காவிரி நதியினால் வளம் கொழிக்கும் டெல்டா மாவட்டங்கள்தான் தமிழகத்தின் நெல் களஞ்சியமாக திகழ்கின்றன. அதனால்தான் 'சோழ நாடு சோறுடைத்து' என்ற முதுமொழி பண்டைய காலந்தொட்டே சொல்வழக்கில் இருந்துவருகிறது. இங்கு குறுவை, சம்பா மற்றும் தாளடி நெல் சாகுபடிகள் ஆண்டுதோறும் நடக்கிறது. மேட்டுர் அணையில் நடப்பாண்டு முழுவதும் 100 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்ததால், காவிரி நீர் கடைமடை வரை பெருக்கெடுத்து ஓடியது. இதுமட்டுமல்லாமல் பருவமழையும் கைகொடுத்தது. இதனால் தண்ணீர் பஞ்சம் மிஞ்சித்துமில்லாமல் விவசாயம் செழித்ததால் டெல்டா மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் குறுவை சாகுபடி இருந்தது. கடந்த ஆண்டு குறுவையில் நெல் சாகுபடி 3.80 லட்சம் ஏக்கரில் இருந்த நிலையில், இந்த ஆண்டில் 6.31 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடையும் தொடங்கியிருக்கிறது.

Update: 2025-10-25 04:20 GMT

Linked news