வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 25-10-2025

வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில் 22 ஆயிரம் பேர்: சென்னை மாநகராட்சி தகவல்

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் 215 இடங்களில் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் உணவு, சுகாதார வசதி, குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன. நிவாரண மையங்களுக்கு உணவு வழங்க ஏதுவாக 106 மைய சமையல் கூடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியில் அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Update: 2025-10-25 07:32 GMT

Linked news