விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 26-08-2025

விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்: செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், “குறைந்தபட்சம் மேடையில் நாகரீகமாக பேச வேண்டும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து கணிசமான வாக்குகள் பெற்றார். 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற அந்த கட்சி, தற்போது என்ன நிலையில் இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி கூட்டிய மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

கடைசியில் காங்கிரஸ் கூட கட்சியில் இணைத்து கொண்டார்கள். தற்போது அந்த கட்சியே இல்லை. அதுபோன்று பல கட்சிகள் வரும், காணாமல் போகும். காங்கிரஸ் நிலைத்து நிற்பதற்கு காரணம் சித்தாந்தம் வலிமையாக இருப்பதே ஆகும். யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ். நாங்கள் யாரையும் கொச்சைப்படுத்தி பேச மாட்டோம். எங்கள் கொள்கை எதிரியான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா இருந்தாலும் நாகரீகமாக தான் அவர்களை பற்றி பேசுகிறோம்” என்று அவர் கூறினார்.


Update: 2025-08-26 03:45 GMT

Linked news