விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்: செல்வப்பெருந்தகை


விஜயகாந்த், சிரஞ்சீவி நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்: செல்வப்பெருந்தகை
x

யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ் என்று செல்வப்பெருந்தகை கூறினார்.

கடலூர்,

கடலூரில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நாட்டு மக்களுக்கு எது நன்மையோ, அதைத் தான் காங்கிரஸ் செய்யும். தற்போது இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது. 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறக்கூடிய ஒரே கூட்டணி. இந்தியா கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய விருப்பம் தெரிவித்து உள்ளன. அதனால் பலமான கூட்டணியாக உள்ளது. துணை ஜனாதிபதி போட்டியில் தமிழகத்தில் இந்தியா கூட்டணி 100 சதவீத வாக்குகள் பெற உள்ளது. பா.ஜனதா, அ.தி.மு.க. கூட்டணிக்கு ஒரு வாக்குகள் கூட கிடைக்காது.

தமிழ்நாட்டின் உரிமைகளை பா.ஜனதா பறித்து வருகிறது. தமிழகத்தின் வரலாறு, கலாசாரம், கீழடி அகழ்வாராய்ச்சி உள்ளிட்டவற்றை பா.ஜனதா மாற்றி அமைக்க எழுத கூறுகிறது. அதை சீரழிக்க வேண்டிய நடவடிக்கைகளை பா.ஜனதா செய்கிறது. இது தமிழர்களுக்கு விரோதமான செயல். பீகாரில் பா.ஜனதாவுக்கு எதிராக தற்போது எழுச்சி அலை ஏற்பட்டுள்ளது. பீகாரில் தோல்வி பயம் வந்து விட்டது பா.ஜனதாவுக்கு. அங்கு ராகுல்காந்தியை பலர் பின் தொடர்கிறார்கள்.

குறைந்தபட்சம் மேடையில் நாகரீகமாக பேச வேண்டும். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து கணிசமான வாக்குகள் பெற்றார். 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெற்ற அந்த கட்சி, தற்போது என்ன நிலையில் இருக்கிறது. நடிகர் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற கட்சியை தொடங்கி கூட்டிய மாநாட்டில் 20 லட்சம் பேர் கலந்து கொண்டனர்.

கடைசியில் காங்கிரஸ் கூட கட்சியில் இணைத்து கொண்டார்கள். தற்போது அந்த கட்சியே இல்லை. அதுபோன்று பல கட்சிகள் வரும், காணாமல் போகும். காங்கிரஸ் நிலைத்து நிற்பதற்கு காரணம் சித்தாந்தம் வலிமையாக இருப்பதே ஆகும். யானை பலம் உள்ள ஒரு கட்சி காங்கிரஸ். நாங்கள் யாரையும் கொச்சைப்படுத்தி பேச மாட்டோம். எங்கள் கொள்கை எதிரியான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா இருந்தாலும் நாகரீகமாக தான் அவர்களை பற்றி பேசுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story