டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 28-11-2025
டித்வா புயலின் வேகம் குறைந்தது - வானிலை ஆய்வு மையம் தகவல்
மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த டித்வா புயலின் வேகம் தற்போது 3 கிலோ மீட்டராக குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயலானது இலங்கை திரிகோண மலையிலிருந்து தெற்கே சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கை மட்டக்களப்பிலிருந்து வடமேற்கே 120 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுவையிலிருந்து தென்கிழக்கே 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையிலிருந்து தென்கிழக்கே 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-11-28 12:04 GMT