டிஜிட்டல் கைது மோசடி: முதியவரிடம் ரூ.50 லட்சம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 29-10-2025

டிஜிட்டல் கைது மோசடி: முதியவரிடம் ரூ.50 லட்சம் பணம் பறித்த இருவர் கைது

முதியவரை டிஜிட்டல் கைது மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் வாட்ஸ்அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அரசு அதிகாரிகள் போல் நடித்து ஏமாற்றியுள்ளனர். கடந்த செப்டம்பர் 11-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையிலான காலகட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது ஒரு மோசடி வேலை என்பதை உணர்ந்து கொண்ட முதியவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். பணத்தை பெறுவதற்காக பயன்படுத்தப்பட்ட வங்கிக் கணக்குகளை வைத்து விசாரணை நடத்திய போலீசார், விசாரணையின் முடிவில் ரவி அனந்தா அம்போரே(35) மற்றும் சந்திரகாந்த் ஜாதவ்(37) ஆகிய இருவரை கைது செய்துள்ளனர்.

Update: 2025-10-29 14:31 GMT

Linked news