'அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 30-04-2025

'அடுத்த 36 மணி நேரத்தில் தாக்குதலை தொடங்கும் இந்தியா' - பாகிஸ்தானை எச்சரித்த அந்நாட்டு உளவுத்துறை


அடுத்த 36 மணி நேரத்தில் இந்தியா தாக்குதலை தொடங்கும் என பாகிஸ்தான் அரசை அந்நாட்டு உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் மந்திரி அட்டாவுல்லா தரார் கூறுகையில், "பஹல்காமில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு குறித்து ஆதாரமற்ற மற்றும் ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தயாராகி வருகிறது"  என்று கூறினார்.


Update: 2025-04-30 05:46 GMT

Linked news