வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்;... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 31-08-2025
வைகை ஆற்றில் மனுக்கள் வீசப்பட்ட விவகாரம்; தாசில்தார் இடமாற்றம், 7 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை
'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள், திருப்புவனம் வட்டாட்சியர் அலுவலகத்தால் முறையாகக் கையாளப்படாமல், வைகை ஆற்றில் வீசப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.
Update: 2025-08-31 04:03 GMT