"காலி பண்ண பெரிய கூட்டமே வேல செய்யுது..."- இயக்குநர் மோகன் ஜி

‘திரெளபதி 2’ படத்தில் இருந்து ‘எம்கோனே’ பாடல் சமீபத்தில் வெளியானது.;

Update:2025-12-06 14:07 IST

சென்னை,

மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘திரெளபதி 2’. இப்படத்தில் இருந்து ‘எம்கோனே’ பாடல் சமீபத்தில் வெளியானது. இதனை சின்மயி பாடியிருந்தார். இது இணையத்தில் பெரும் விவாதமாகவே அதற்கு மன்னிப்புக் கோரினார் சின்மயி.

அதனைத்தொடர்ந்து, சிலர் சின்மயிக்கு ஆதரவாகவும், சிலர் மோகன் ஜிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பேட்டி ஒன்றில் இயக்குநர் மோகன் ஜி இது குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசுகையில், 

''இப்போ தான் படத்தோட முதல் பாடலே வெளியாகிருக்கு. அதுக்குள்ள படத்த காலி பண்ணனும்னு பெரிய கூட்டமே இறங்கி வேல செய்யுது. இந்த உண்மைய சின்மயி வாயாலயே சொன்னா நல்லாருக்கும். நான் சொன்னா குற்றச்சாட்டு ஆகிடும். வலதுசாரி சித்தாந்தம் பத்தி படம் எடுத்தா தாக்குதல் வர தான் செய்யும். அதெல்லாம் சமாளிச்சா தான் இந்த மோகன் ஜி மாதிரி நிக்க முடியும்'' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்