பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா சாமி தரிசனம்
பேரூர் பட்டீசுவரர் கோவிலில் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகா சாமி தரிசனம் செய்தனர்.;
கோவை,
கோவையை அடுத்த பேரூரில் பட்டீசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று இரவு நடிகர் பிரசன்னா தனது மனைவி நடிகை சினேகாவுடன் வந்தார். அவர்களுடன் சினேகாவின் தந்தை மற்றும் உறவினர்களும் வந்து இருந்தனர்.
அவர்கள், பட்டீசுவரரை வழிபட்டு அர்ச்சனை செய்து தரிசனம் செய்தனர். அதன்பிறகு கோவில் வெளிப்பிரகாரத்தில் உள்ள பால தண்டபாணி சன்னதி, பச்சைநாயகி அம்மன், கனகசபை மண்டபத்தில் உள்ள நடராஜர் சன்னதிகளில் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் கொடிமரம் முன்பு, நடிகர் பிரசன்னா, சினேகா ஆகியோர் கீழே விழுந்து வணங்கினர். இதைத்தொடர்ந்து கோவிலில் இருந்த பக்தர்கள் நடிகர் பிரசன்னா, நடிகை சினேகாவுடன் ஆர்வமுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். இதையடுத்து அவர்கள், சிறிது நேரம் கோவிலில் அமர்ந்து இருந்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.