மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
பராசக்தி படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.;
தமிழ் திரைத்துறையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா, ராணா டகுபதி, ஸ்ரீலீலா, பாசில் ஜோசப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரடத்தில் நடிக்கின்றனர். பராசக்தி படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, பராசக்தி படத்தின் படப்பிடிப்பு பணிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சாமி தரிசனம் செய்தார். மாசாணியம்மன் கோவிலுக்கு வந்த சிவகார்த்திகேயனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாசாணியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தப்பின் சிவகார்த்திகேயன் பராசக்தி படப்பிடிப்பு தலத்திற்கு புறப்பட்டு சென்றார்.