``குழந்தை பெத்துக்குற ஐடியா இல்லை’’- வரலட்சுமி சரத்குமார்
தனக்கு இப்போது குழந்த பெத்துக்குற ஐடியா இல்லை என்று வரலட்சுமி கூறியுள்ளார்.;
சென்னை,
தமிழ் , தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், தனக்கு குழந்த பெத்துக்குற ஐடியா இல்லை என்று வரலட்சுமி கூறியுள்ளார். அவர் கூறுகையில்,
``ஒரு குழந்தைய பெத்து கொடுத்தா மட்டும் தான் தாய்மை அடைய முடியும்னு சொல்ல முடியாது. எனக்கு இப்ப குழந்த பெத்துக்குற ஐடியா இல்ல. எதிர்காலத்துல மாறலாம். நான் ஏற்கெனவே என் தங்கச்சி, பிரெண்ட்ஸ், நாய்க்குலாம் அம்மாவ தான் இருக்கேன். இதுல இன்னொரு குழந்தைய என்னால பாத்துக்க முடியாது. ஒரு பொண்ணு குழந்த பெத்துக்க வேண்டாம்னு முடிவு எடுத்தா, அதுதான் `பெஸ்ட் பேரென்டிங்’ முடிவா இருக்கும் '' என்றார்.