உலக நடன தினத்தையொட்டி நடிகை மஞ்சு வாரியர் வெளியிட்ட வீடியோ வைரல்

உலக நடன தினத்தை முன்னிட்டு நடிகை மஞ்சு வாரியர் குச்சிப்புடி நடனமாடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.;

Update:2025-04-30 08:38 IST

சென்னை,

மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் 'அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்' போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் 'மிஸ்டர் எக்ஸ்' படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகை மஞ்சுவாரியர் உலக நடன தினத்தை முன்னிட்டு குச்சிப்புடி நடனமாடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது, உலகெங்கும் ஏப்ரல் 29-ம் தேதி சர்வதேச நடன தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் புகழ் பெற்ற பாலே நடனக் கலைஞர் ஜீன் ஜார்ஜஸ் கோவ்ரே பிறந்த நாளாகும். அவரது நினைவைப் போற்றும் விதமாக, அவரது பிறந்த தினத்தை சர்வதேச நடன தினமாகக் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்