சலாரில் தவறிய வாய்ப்பு...தி ராஜா சாபில் நிறைவேறிய மாளவிகா மோகனனின் ஆசை
பிரபாஸுடன் ’தி ராஜா சாப்’ படத்தில் மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.;
சென்னை,
நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்டகால ஆசை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார்.
விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த பிறகு, பிரபாஸ் கதாநாயகனாக நடித்த ’சலார்’ படத்திற்காக இயக்குனர் பிரசாந்த் நீலிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்து கொண்டார்.
பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடந்ததாகவும், ஆனால் இறுதியில் எதிர்பாராத காரணங்களால் அது கைநழுவி சென்றதாகவும் தெரிவித்தார்.
இப்போது இறுதியாக மாளவிகா மோகனனின் ஆசை நிறைவேறியுள்ளது. அவர் பிரபாஸுடன் ’தி ராஜா சாப்’ படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 10-ம் தேதி தமிழில் திரைக்கு வர உள்ளது.