ஆனந்தராஜின் “மெட்ராஸ் மாபியா கம்பெனி” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆனந்தராஜ், பிக் பாஸ் சம்யுக்தா நடிக்கும் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படம் வரும் 14ம் தேதி வெளியாகிறது.;

Update:2025-11-08 16:15 IST

சென்னை,

'பாஷா, சூர்ய வம்சம் மற்றும் போக்கிரி' போன்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பெயர் பெற்றவர் நடிகர் ஆனந்தராஜ். இவர் தற்போது அறிமுக இயக்குனர் ஏ.எஸ்.முகுந்தன் இயக்கத்தில் ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிக் பாஸ் சம்யுக்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

வடசென்னை பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. அண்ணா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வி.சுகந்தி அண்ணாதுரை இப்படத்தை தயாரிக்கிறார். முனிஷ்காந்த், தீபா, சசிலயா, ராம்ஸ், ஆனந்த் பாபு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகின்றனர். அசோக் ராஜ் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். ஒரு தாதாவின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்களைச் சொல்லும் படமாக இது உருவாகிறது.

Advertising
Advertising

சமீபத்தில் நடிகர் ஆனந்தராஜ் 'நானும் ரவுடி தான் மற்றும் கன்ஜூரிங் கண்ணப்பன்' போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் ஆனந்தராஜ் முந்தைய படங்களில் நடித்தது போல தாதா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் சம்யுக்தா காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார். ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படத்தின் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், ‘மெட்ராஸ் மாபியா கம்பெனி’ படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்