''ஜூடோபியா 2'' - இந்த கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்த ஷ்ரத்தா கபூர்

இந்தப் படம் நவம்பர் 28-ம் தேதி இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது.;

Update:2025-11-08 16:10 IST

சென்னை,

டிஸ்னி நிறுவனத்தின் 'ஜூடோபியா 2' படத்தில் ஜூடி ஹாப்ஸின் கதாபாத்திரத்திற்கு நடிகை ஷ்ரத்தா கபூர் இந்தியில் குரல் கொடுத்துள்ளார்.

2016-ம் ஆண்டு வெளியான ஜூடோபியாவின் தொடர்ச்சியாக உருவாகி இருக்கும் இந்தப் படம் நவம்பர் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோ தயாரிப்பில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படம், ‘ஜூடோபியா’. போலீஸ் காமெடி படமான இதை பைரோன்ஹோவர்ட், ரிச் மூரே இயக்கி இருந்தனர். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் இப்போது 'ஜூடோபியா 2' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதை ஜேரெட் புஷ் மற்றும் பைரன் ஹோவர்ட் இயக்கியுள்ளனர்.

Advertising
Advertising
Tags:    

மேலும் செய்திகள்