ரன்வீர் சிங் - சாரா நடிக்கும் ’துரந்தர்’....டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.;

Update:2025-11-08 14:47 IST

சென்னை,

'தெய்வ திருமகள்' படத்தில் விக்ரமின் மகளாக நடித்து கவனம் ஈர்த்த சாரா அர்ஜுன் ’துரந்தர்’ படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

ஆதித்ய தார் இயக்கி உள்ள இந்த படத்தில் மாதவன், சஞ்சய் தத், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால் உட்படப் பலர் நடித்திருக்கின்றனர்.

சாஸ்வத் சச்தேவ் இதற்கு இசையமைத்திருக்கிறார். 'துரந்தர்' படத்தில் ரன்வீர் சிங் இந்திய உளவாளியாக நடிக்கிறார். ரன்வீர் ஜோடியாக நடிக்கும் சாரா, அங்குள்ள அரசியல் கட்சித்தலைவரின் வாரிசாக வருகிறார். இப்படம் வரும் டிசம்பர் 5ம் தேதியன்று உலகம் முழுக்க வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிரெய்லர் வருகிற 12-ம் தேதி மதியம் 12.12 மணிக்கு வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்