கமலிடலிருந்து நான் கற்றுக்கொண்டது மிக அதிகம் - நடிகர் அனுபம் கெர்

நடிகர் கமல் குறித்து பாலிவுட் நடிகர் அனுபம் கெர் நெகிழ்ச்சியாக பகிர்ந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.;

Update:2025-12-19 20:05 IST

அனுபம் கெர் பாலிவுட்டில் மூத்த நடிகரில் முக்கியமானவர். 1984-ம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமான இவர் கடந்த 40 ஆண்டுகளில் 540 படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது, 8 முறை பிலிம்பேர் விருது, மத்திய அரசின் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகள் என்று பல கவுரவங்களையும் பெற்றுள்ளார்.பாலிவுட்டில் மூத்த நடிகராக இருக்கும் அனுபம் கெர் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தனது புதிய படமான 'தன்வி தி கிரேட்' எனும் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் கமலை சந்தித்தது குறித்து புகைப்படத்தை அனுபம் கெர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் “டில்லி விமான நிலையத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களுல் ஒருவரான கமல்ஹாசன் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். பல ஆண்டுகளாக அவரது நடிப்பு, இயக்கத்தின் மீது ரசிகராக இருந்துள்ளேன். நடிகராக அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்டது மிகவும் அதிகம். அவரது சிறந்த நடிப்புக்கு கணக்கே இல்லை.

விமான நிலைய ஓய்வறையில் நாங்கள் ஒருமணி நேரம் உட்கார்ந்து பேசியிருப்போம். அதில் நாங்கள் வாழ்நாள் முழுவதும் பேசியதுபோல் இருந்தது.பல தலைப்புகளில் பேசினோம். உலக சினிமா, கே.பாலசந்தர் சார், வாழ்க்கைப் பாடங்கள், பிடித்த புத்தகங்கள், ரஜினி சார் குறித்தும் பேசினோம். அது மிகவும் ஆடம்பரமான பேச்சாக இருந்தது. உங்களின் பாராட்டு, அரவணைப்பு, அறிவுரைகளுக்கு நன்றி! அன்பு, மரியாதை மற்றும் பிரார்த்தனை எப்போதும்” என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்