அனுராக் காஷ்யப்பின் "பான்டர்" படம் டொரண்டோ திரைப்பட விழாவுக்கு தேர்வு

டொரண்டோ திரைப்பட விழா வரும் செப்டம்பர் 4 முதல் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.;

Update:2025-07-22 20:37 IST

இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள 'பான்டர்' என்ற படம் டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. பிரபல இந்தி இயக்குநர் அனுராக் காய்ஷப் பாபி தியோலை வைத்து 'பான்டர்' (மங்கி இன் எ கேஜ்) என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாபி தியோல் உடன் நடிகை சான்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது, இந்தப் படம் மிகவும் புகழ்பெற்ற டொரண்டோ திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது. இந்தத் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 4 முதல் 14ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

டொரண்டோ திரைப்பட விழாவின் 50வது எடிஷனில் தேர்வாகியுள்ள இந்தியப் படத்துக்கு பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தப் போஸ்டரை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ள பாபி தியோல், "சொல்லப்படாத கதைகள்... 50-வது டொரண்டோ திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமாக தேர்வாகியுள்ளது" எனக் கூறியுள்ளார்.நிஜ கதையை திரைப்படமாக எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அனிமல் படத்தில் கவனம் ஈர்த்த பாபி தியோல் தமிழில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். ஜன நாயகன், ஆல்பா, ஹரி ஹர வீர மல்லு போன்ற படங்களும் திரைக்கு வரவிருக்கிறது.சான்யா மல்ஹோத்ரா 'தக் லைப்' படத்தில் பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்