இந்த தேதியில் வெளியாகிறதா சல்மான் கானின் ’கல்வான்’ பட டீசர்?
இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார்.;
சென்னை,
சல்மான் கான் அடுத்து 'கல்வான்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அவரது தோற்றத்தை வெளியிட்டிருந்தனர், இது கவனம் ஈர்த்த்து. இப்போது, டீசர் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, சல்மான் கானின் பிறந்தநாளான வருகிற 27-ம் தேதி டீசர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அப்போர்வா லக்கியா இயக்கும் இந்த படத்தில் சித்ராங்தா சிங் கதாநாயகியாக நடிக்கிறார். சல்மான் கானின் முந்தைய வெளியீடான 'சிக்கந்தர்' படம் எதிர்ப்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்பதால், அனைவரது கவனமும் இப்படத்தின் மீது உள்ளது.