ஸ்ரீலீலா விலகல்...லெனின் படத்தில் இணைந்த பிரபல நடிகை

இந்த படத்தில், ஸ்ரீலீலா முதலில் கதாநாயகியாக நடித்தார்.;

Update:2026-01-02 20:03 IST

சென்னை,

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, ''லெனின்'' படத்தின் மூலம் ரசிகர்களை கவர உள்ளார்.

கிஷோர் அப்புரு இயக்கத்தில் அன்னபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், ஸ்ரீலீலா முதலில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் அவர் விலகியதாகவும் அவருக்கு பதிலாக பாக்யஸ்ரீ போர்ஸ் இறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த தகவல் உண்மையாகி இருக்கிறது. 'லெனின்' படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் பாரதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் முதல் பாடல் வருகிற 5-ம் தேதி வெளியாக உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்