“ஜனநாயகன்” படத்தின் “ராவண மவன்டா” பாடல் வெளியானது
விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படம் வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.;
சென்னை,
சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, போன்ற வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குநர் எச்.வினோத். தற்போது இவர் யை வைத்து ‘ஜனநாயகன்’ படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தின் எடிட்டிங் பணிகள் வரை முடிவடைந்து பொங்கல் வெளியீடாக வரும் 9-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
இதில், நாயகியாக பூஜா ஹெக்டேவும் முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூவும் நடித்துள்ளனர். தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கும் விஜய் நடிக்கும் கடைசி படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இதனால் படத்துக்கு சினிமா தாண்டி அரசியல் களத்திலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வழக்கமான விஜய் படம் போன்று இல்லாமல், இந்த படத்தில் அரசியல் நெடி அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் ஜலில் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6.45 மணிக்கு தமிழ், இந்தி , தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டிரெய்லர் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் ‘ஜனநாயகன்’ படத்தின் முன்பதிவு வரும் 4ம் தேதி தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடு, மற்ற மாநிலங்களில் முன்பதிவு ஏற்கனவே தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் ‘ராவண மவன்டா’ பாடல் வெளியாகியுள்ளது. தற்போது வெளியான பாடல் லிரிக்கல் வீடியோவில், விவேக் எழுதிய பாடல் வரிகளுடன் மலேசியாவில் நடைபெற்ற இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவின் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.