“பைசன்தான் என்னுடைய முதல் படம்” - நடிகர் துருவ் விக்ரம்
இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.;
சென்னை,
'ஆதித்யா வர்மா' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகர் துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' படத்தினை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன. இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வருவதால், படக்குழு புரமோஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது.
அந்த வகையில், புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் துருவ் விக்ரம் பேசியது மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பைசனை தன்னுடைய முதல் படமாகப் பார்ப்பதாகவும் நீங்களும் அப்படி பார்ப்பீர்கள் என நம்புவதாகவும் அவர் கூறினார்.