அரசியல்வாதியாக விஷ்வக் சென்...'லேகசி' டீசரை பார்த்தீர்களா?

இந்த படத்தின் அறிவிப்பு டீசரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.;

Update:2026-01-02 14:44 IST

சென்னை,

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்வக் சென் அடுத்து நடித்து வரும் படம் 'லேகசி'. இந்த படத்தின் அறிவிப்பு டீசரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த டீசரை பார்க்கும்போது, இது ஒரு அரசியல் படம் என்பது தெளிவாகிறது. இந்த படத்தில், ஹீரோ விஷ்வக் சென் ஒரு அரசியல்வாதியாக நடிக்கிறார்.

சாய்கிரண் ரெட்டி டைடா இயக்கும் இந்தப் படத்தை யஷ்வந்த் டகுமதி மற்றும் சாய்கிரண் ரெட்டி டைடா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஏக்தா ரத்தோட், ராவ் ரமேஷ், சச்சின் கெத்கர், முரளி மோகன், கே.கே. மேனன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்