'சிறை' படத்திற்கு இயக்குநர் சங்கர் கொடுத்த ரிவ்யூ

இந்த வருடத்தை மிகச்சிறப்பாக தமிழ் சினிமா நிறைவு செய்துள்ளதாக சங்கர் தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-30 15:15 IST

சென்னை,

விக்ரம் பிரபுவின் ’சிறை’ படத்தை பார்த்த இயக்குநர் சங்கர் , பாராட்டி பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“சிறை ஒரு நல்ல படம். பல காட்சிகளில் நான் அழுதேன். படம் முடிந்த பிறகும் கதாபாத்திரங்களும், நடிப்பும் என் மனதில் நிற்கிறது. விக்ரம் பிரபுவின் நடிப்பு அசத்தல்.

அக்சய் குமார் மற்றும் அனிஷ்மாவின் நடிப்பு உணர்வுகளை அழகாக வெளிக்காட்டி இருந்தது. இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு வாழ்த்துகள். படத்தின் கடைசி காட்சி கூறிய செய்தி மிகவும் வலிமையானதவும், பொருத்தமானதாகவும் இருந்தது. இந்த வருடத்தை மிகச்சிறப்பாக தமிழ் சினிமா நிறைவு செய்துள்ளது.’ என்று தனது ரிவ்யூவை இயக்குநர் சங்கர் கொடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்