சன்னி லியோன் கலந்துகொள்ள இருந்த புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.;
உ.பி,
பாலிவுட் நடிகையும் மாடலுமான சன்னி லியோன் கலந்துகொள்ள இருந்த புத்தாண்டு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் சன்னி லியோனின் புத்தாண்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு அங்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மதுரா ஒரு புனித நகரம் என்றும், இதுபோன்ற நிகழ்ச்சிகளை நகரத்தில் அனுமதிக்க முடியாது என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்கப்பட்டது. எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, நிகழ்வை ரத்து செய்ய ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர்.