ரிலீஸ் தேதி அறிவிப்பு...அஜய் தேவ்கனின் 'திரிஷ்யம் 3' எப்போது திரைக்கு வருகிறது தெரியுமா?
இப்படத்தின் முதல் பாகம் 2015 இல் வெளியானது.;
சென்னை,
அஜய் தேவ்கன் நடித்து ஹிட்டான கிரைம் திரில்லர் படங்களில் ஒன்று திரிஷ்யம். தற்போது இதன் 3-ம் பாகம் உருவாகி வருகிறது.
திரிஷ்யம் 3 படத்தில் விஜய் சல்கோன்கராக அஜய் தேவ்கன் நடிக்கிறார், இவருடன் தபு, ஷ்ரியா சரண், இஷிதா தத்தா, ரஜத் கபூர் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திரிஷ்யம் 3 அடுத்தாண்டு அக்டோபர் 2-ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் முதல் பாகம் 2015 இல் வெளியானது. அதைத் தொடர்ந்து 2-ம் பாகம் 2022-ல் வெளியானது. தற்போது அபிஷேக் பதக் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தை அலோக் ஜெயின், அஜித் அந்தாரே, குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் ஆகியோர் தயாரிக்கின்றனர்.