தமிழ் திரையுலகையும் விட்டு வைக்காத போதைப்பொருள் கலாசாரம்? போலீஸ் தீவிர விசாரணை

பாலிவுட், டோலிவுட், மாலிவுட் உலகில் இருந்து வந்த போதைப்பொருள் கலாசாரம் தமிழ் திரை உலகையும் விட்டு வைக்கவில்லை.;

Update:2025-06-24 16:51 IST

சென்னை,

போதைப்பொருள் பயன்படுத்துவது பாலிவுட் உலகில் அதிகமாக இருந்து வந்தது. இதைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாள திரை உலகிலும் பரவிய போதைப்பொருள் கலாசாரம் தமிழ்த் திரை உலகையும் விட்டு வைக்க வில்லை. பாலிவுட்டை பொருத்தவரை பல நடிகர்கள் போதைப் பொருள் வழக்கில் சிக்கிய நிலையில் சமீபத்தில் மலையாள நடிகரான ஷான் டைம்சாக்கோ போதைப் பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் தமிழ் திரை உலக பிரபலங்கள் பலரிடம் கொகைன் போதைப் பொருளை பயன்படுத்துவது அதிகரித்து வருவதை போலீசார் கண்காணித்து வந்தனர். பெரும்பாலும் இரவு விருந்து, கடற்கரை ரிசார்ட் வீடுகளில் நடைபெறும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் போதைப்பொருள் பயன்பாடு அவசியமாக இருந்துவருகிறது. இந்நிகழ்ச்சிகளில் திரை உலக பிரபலங்கள் பலர் பங்கேற்று போதைப் பொருள்களை பயன்படுத்தி வருவது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

விலை உயர்ந்த இந்த கொகைன் போதைப் பொருட்களை பயன்படுத்தும் போது எந்தவித போதை வாசனையும் வருவதில்லை. எனவே கொகைன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை திரை உலகில் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீசார் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். பாலிவுட், டோலிவுட், மாலிவுட் உலகில் இருந்து வந்த போதைப் பொருள் கலாசாரம் தமிழ் திரை உலகையும் விட்டு வைக்கவில்லை. இது தொடர்பாக முதல் முறையாக பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்