விஜய் சேதுபதியின் ஊமைப் படம் ‘காந்தி டாக்ஸ்’ - டிரெய்லர் வெளியீடு
இப்படம் வரும் 30-ம் தேதி வெளியாக உள்ளது.;
சென்னை,
உரையாடல் இல்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது சினிமாவில் மிகப்பெரிய சவாலான முயற்சியாக கருதப்படுகிறது. அதனால் ஊமைப் படங்கள் அரிதாகவே திரைக்கு வருகின்றன. இந்த வகை படங்களை வெற்றிகரமாக கையாள முடியும் என்பது சில இயக்குநர்களுக்கே சாத்தியமாகியுள்ளது.
அந்த வரிசையில், இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பலேகர் தனது ‘காந்தி டாக்ஸ்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஊமைப் படங்களின் அனுபவத்தை மீண்டும் ரசிகர்களுக்கு அளிக்க உள்ளார்.
விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி, அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் 30ஆம் தேதி வெளியாகும் நிலையில், அதன் டிரெய்லர் தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.